women
இலங்கையில் பெண்களுக்கெதிரன வன்முறைகள்
by admin
புரட்டாதி 2, 2015

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் அதிகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு உள்ளாகி வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பெண்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் அதிகளவில் இடம்பெறும் வன்முறையாக குடும்பத்தலைவரகள் மது போதையில் தமது மனைவியரை அடித்து துன்புறுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். 2005ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சட்ட திட்டங்களின் படி வீட்டு வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திக் கீழ் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது குறிப்பாக “காந்தா பீட்ட” என்ற அமைப்பு பெண்கள் தொடர்பாக வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தமக்கு நிவாரணம் தேட முற்பட முயற்சிக்கும் சற்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்காக இலங்கையில் காரியாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆந்த வகையில் இதற்கான காரியாலயமாக இலங்கையின் பொரளையில் உள்ள காரியாலயத்தில் வீட்டு வன்முறையின் காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் தமக்கான நீதிக்கான பரிந்துரையை மேற்கொள்ள முடியும். அல்லது காரயாலய தொலைபேசி இலக்கமான 0114718585 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

 
இலங்கை பெண்கள் உரிமைகள் தொடர்பான பல சர்வதேச பிரகடணங்களை ஏற்றும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் இவ்வுரிமைகளை ஏற்று அங்கீகரித்துள்ள நிலையில் நடைமுறையில் இவற்றின் பிரயாகத்தைப் பார்ப்பது அவசியமாகின்றது. இலங்கை அரசியல் அமைப்பு உறுப்புரை 12 இன் கீழ் சமத்துவ உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பினும் அவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களுடன் முரண்படும் போது அச்சட்டங்களே மேலோங்கும் என்ற நிலை காணப்படுகின்றமை இதன் செயற்பாட்டுத் தன்மைக்கு குந்தகமான ஒரு நிலையையே தோற்றுவிப்பதாகின்றது. அது மட்டுமல்லாது இலங்கை ஒரு பன்மைத்துவக் கலாசாரபின்னணியையும் பன்மைத்துவ சமூக அமைப்பபையும் கொண்ட நாடாகும். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான உரிமைகள் மீறல்கள் எந்த மட்டத்தில் அதிகம் இடம் பெறுகின்றது என்பது இனங்காணப்பட வேண்டியதாகின்றது.

 
இன்று இலங்கை பெண்கள் உரிமைகளை ஏற்று அங்கிகரித்துள்ள நாடாக விளங்குகின்ற போதும் அது அங்கீகரித்துள்ள சர்வதேச சமவாயங்களின் கட்டுப்பாடுகளை பூரணப்படுத்த இன்றும் முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளதாகவுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் பற்றிய அறிவை பரவலாக்குதல் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்துவதுடன் வாயிலாகவும் தேவையான புதிய சட்டங்களில் அறிமுகம் மூலமாகவுமே இவற்றை அடையலாம்.

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS