women
பெண் தலைமைத்துவக்குடும்பங்கள்
by Kiyanna Staff
வைகாசி 18, 2017

நாட்டின் 24.3 சதவீதமான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான தொகை மதிப்பு வெளியீடு தெரிவிக்கிறது. அதிகளவான பெண் தலைமைத்துவ குடும்பங்களை கொண்ட மாவட்டமாக கண்டியும், அதற்கடுத்த இடத்தில் மட்டக்களப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பின்னணி நாட்டின் மற்றைய பிரதேசங்களில் வாழ்வோரை விட சற்றே வேறுபட்டது. இந்த மக்கள் பெரும்பாலும் யுத்தத்தினால் வாழ்வாதாரத்தினை இழந்தவர்கள் இரண்டாவது இங்கு இறந்தோர் என்பதைத்தவிர காணாமற்போனோர் என்ற பிரிவும் பரவலாக இருக்கிறது.

இதனால் இவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். உள்ளூர் சட்டங்கள் உதாரணமாக யாழ்ப்பாணத்தின் தேசவழமைச்சட்டம் ஆகியன சட்டச்சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. உதாரணமாக கணவர் காணாமல் போன ஒருவராக இருந்தால் அவருக்கு இறப்புச் சான்றிதழ் இருக்காது. தற்போது குடும்பத்துக்கு தலைமை தாங்கும் அவர் மனைவி சொத்துக்களை விற்கவோ, வங்கியில் அடகு வைத்து கடன் பெறவோ எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு கணவரின் சம்மதமும் கையொப்பமும் தேவைப்படுகிறது.

ஆகவே பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவர்களின் தனித்துவமான பிரச்சனைகள் மாவட்ட அளவில் ஆராயப்பட்டே தேசிய செயற்றிட்டம் உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கியநாடுகள் குடித்தொகை நிதியமும் செயற்பாட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய செயற்றிட்ட உருவாக்கத்தின் மாவட்ட ரீதியான கலந்துரையாடல் சமீபத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இடம்பெற்றது

15
பெண்கள் மற்றும் சிவர் விவகார அமைச்சின் செயலர் திருமதி அசோகா அலவத்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியபோது

பெண்கள் அபிவிருத்தி அலுவலர், பெண்கள் சங்க உறுப்பினர்கள், லீகலேட் கமிஷன் அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இந்தப்பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சமூக உளவள ஆலோசகரின் உதவி கிடைக்கச்செய்தல் மிக முக்கிய தேவையாகும். யுத்தத்தினால் பல வழிகளில் பாதிக்கப்பட்டு இருக்கும் அம்மக்களுக்கு இதுவே முக்கிய தேவையாகும் என்று இரண்டு மாவட்டங்களிலும் பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பெண்கள் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள்: வீட்டில் தாயார் வேலைக்கு சென்றதும் பாதுகாப்பின்றி தனியே இருக்கும் பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதும் தவறான சேர்க்கை மூலம் அவர்களே பாதை தவறுதலும் அங்கே இருக்கும் இன்னொரு பிரச்சனையாக குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி யாரிடம் முறையிட வேண்டும் என்பது போன்ற தெளிவான அறிவு அம்மக்களுக்கு இல்லை. முறையிடும் வலையமைப்பு, சட்ட ரீதியாக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் தொடர்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். நம்பகமான இரகசியம் பேணப்படக்கூடிய வகையில் பொறுப்பான அலுவலரின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அங்கே வந்திருந்த பெண்கள் பரவலாக முன்வைத்திருந்தார்கள்

14
முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்பு பிரதிநிதியொருவர்

பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் இணைந்து பலவகையான உற்பத்திகளில் ஈடுபடுகிறார்கள். வெளியூர் உற்பத்திகளை விட அவர்களின் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றன. ஆனால் சந்தைக்கேள்வியோ முறையான சந்தைப்படுத்தல் வசதிகளோ இல்லாததால் அவர்களால் அத்துறையில் லாபமீட்டுவது முடியாத காரியமாக இருக்கிறது. முறையான சந்தைப்படுத்தல் வலையமைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுமானால் அவர்களுக்கு தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்று அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்

குழுக்கலந்துரையாடலின் போது

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் பரவலாக எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை வீடு தேடி வந்து கடன் வழங்கும்  நுண்கடன் நிறுவனங்கள். மக்கள் திட்டமே இல்லாமல் அவற்றில் இருந்து கடன்களை

வாங்குவதும் திருப்பிச் செலுத்த முடியாமல் ஊரை விட்டு செல்வதும் தற்கொலை செய்வதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் மக்களை சந்திக்கும் நேரங்கள், அவர்களின் பின்னணி குறித்து ஆராயப்படவேண்டும் என்பதும் அங்கே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றாகும்

 

 

 

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS