youth
பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையின் சமகால பிரச்சனைகளும்
by Kiyanna Staff
பங்குனி 8, 2017

குடித்தொகைப்பங்கிலாபத்தின் போக்கு காரணமாக நாட்டின் வயதானோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வண்ணம் அதிகரித்து செல்வது உண்மையே . இதற்கு இலங்கையின் சிறந்த குடும்பக்கட்டுப்பாட்டு செயற்பாடுகளும் மருத்துவசேவைகளுமே காரணமாக அமைந்தன.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்த படிநிலையினூடாக கடந்து செல்வது சாதாரணமாகும். ஆனால் இதை இப்படி அபிவிருத்தியை நோக்கி வினைத்திறனாக பயன்படுத்துகிறார்கள் என்பதிலேயே அந்நாட்டின் வெற்றி தங்கியிருக்கிறது.இலங்கையின் குடித்தொகையும் அது தொடர்பான பிரச்சனைகளும் சம்பந்தமாக இரண்டு நாள் செயலமர்வு ஒன்றினை AFPPD (Asian Forum of Parliamentarians on Population and Development) மற்றும் UNFPA ஏற்பாடு செய்திருந்தன. இதில் சுகாதாரமும் மருத்துவமும், கல்வி, பெண்கள் விவகாரம், இளைஞர் ஆகிய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் முப்பதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய நிலவரத்தின் படி ஒவ்வொரு சந்ததியினரும் தங்களுடைய முதிர் சந்ததியை பேணிப்பாதுகாக்கும் பிணைப்பு வலுவிழந்து வருகிறது. இது நீண்டகால நோக்கில் உறுதியானதல்ல. ஆகவே பொருளாதாரம் மற்றும் வேலை செய்யும் உரிமை, முழுமையான நலவாழ்வு தொடர்பில் வயதானோரை வலுப்படுத்துவது நம்முடைய கடமையாகும் என்று சமூகவலுப்படுத்தல் மற்றும் நலவாழ்வு அமைச்சர் SP. திஸாநாயக்க கருத்து தெரிவித்தார்.
பெண்களின் சமத்துவம், சமூகம், குடும்பம் தனிப்பட்ட நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது முழுத்திறனையும் பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்று பேச்சாளர்கள் மேலும் வலியுறுத்தினர். அதை தவிர இளைஞர்களில் முதலீடு செய்தல் மற்றும் பாலியல் மற்றும் இனவிருத்திக்கல்வியை முறையாக இளைஞர்களிடையே கொண்டு சேர்த்தல் ஆகியன நீண்டகால நோக்கில் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமான படிக்கற்களாக இருக்கும் என்று பரவலான கருத்து தெரிவிக்கப்பட்டது.

இன்றைத்தேதிக்கு அதிகாரமும் தமக்கென மக்கள் செல்வாக்கையும் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடித்தொகை பிரச்சனை தொடர்பில் களத்தில் இறங்கி ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தால் அது சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பெரும் பாய்ச்சலாகவே அமையும்.

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS