youth
இளைஞர் அபிவிருத்தி தரவரிசையில் இலங்கையின் முன்னேற்றம் கொண்டாடத்தக்கது தானா?
by Kiyanna Staff
ஐப்பசி 31, 2016

 

இளைஞர்கள் என்பவர்கள் ஒருநாட்டின் அபிவிருத்திக்கு மூலைக்கற்கள் போன்றவர்கள். அதிலும் குறிப்பாக குடித்தொகை பாங்கிலாபத்தை தொட்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் இளைஞர்களின் அபிவிருத்தியானது மிக மிக உபயோகமானதே.

2016 ஆம் ஆண்டு பூகோள இளைஞர் அபிவிருத்தி சுட்டியில் இலங்கை 31 ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பது பொதுநலவாயத்திணைக்களத்தின் அறிக்கையில் இருந்து தெரியவந்திருக்கிறது. அதிலும் எட்டு தென்னாசிய நாடுகளில் ஐந்து தங்களது சுட்டெண்ணை முன்னேற்றப்பாதையில் அதிகரித்திருந்தாலும் இலங்கை(31) மற்றும் இந்தியா(133) ஆகிய நாடுகள் பெரும் பாய்ச்சலுடன் தரவரிசையில் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத்தரவரிசையில் முதல் ஐந்து நாடுகளாக ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாண்ட் , ஐக்கிய ராட்சியம் என்பன வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பூகோள இளைஞர் அபிவிருத்தி சுட்டியானது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சமூக, அரசியல் ஈடுபாடு ஆகிய துறைகளை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது.இந்தச்சுட்டியானது 18 குறிகாட்டிகளின் பல்பரிமாண செயன்முறை ஒன்றின் மூலமாக பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த இலங்கையின் இம்முன்னேற்றமானது கொண்டாடத்தக்கதா? என்பது பெரும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பொதுநலவாய செயலகத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான பூகோள இளைஞர் அபிவிருத்தி அறிக்கையை படிக்கும் போது பலவகையான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்த சுட்டெண் 31 ஆக இருந்தாலும் கூட அது பெறப்பட்ட ஐந்து குறிகாட்டிகளை பார்க்கும் போது இலங்கையின் நிலை கொஞ்சம் சிந்தனைக்குரியதாகவே இருக்கிறது. தரவரிசைப்படுத்தப்பட்ட 183 நாடுகளில் இலங்கையின் நிலை பின்வருமாறு.

சுகாதாரம் மற்றும் நலவாழ்வு- 95

கல்வி -108

வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான சந்தர்ப்பங்கள்- 95

அரசியல் பங்குபற்றல்-54

சமூகக்குழுக்களில் இளைஞர்களின் பங்குபற்றல் -17

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வையே எடுத்துக்கொள்வோம். சுகாதாரம் மற்றும் நலவாழ்வில்மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் அறிக்கையிலும் மற்றும் நாடளாவிய வெளியீடுகளிலும் இலங்கை முன்னேற்றத்தை காண்பித்திருந்தாலும் இளைஞர் அபிவிருத்தி அறிக்கையில் இலங்கை 95 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பொதுநலவாய செயலகம் இந்த சுட்டெண்ணை எவ்வாறு கணித்தது. அவர்கள் பயன்படுத்திய குறிகாட்டிகள் என்னென்ன? இளைஞர் மரண வீதம், அல்ககோல் பாவனை, போதைப்பொருள் பாவனை, HIV , மனநிலை பாதிப்பு வீதம்,உலகளாவிய நலவாழ்வு  சுட்டெண் ஆகியவற்றை பயன்படுத்தியே இந்த சுட்டெண் கணிக்கப்பட்டு இலங்கைக்கு 95 ஆம் இடம் கிடைத்திருக்கிறது. நாம் தினம் செய்தித்தாள்களில் படிக்கும் இளைஞர் தற்கொலைகள், அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள், குழு மோதல் சாவுகள், அல்ககோல் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியன இந்த இடத்துக்கு இலங்கையை தள்ளியிருக்கின்றன. ஒரு இளைஞன் தன் முழுமையான சக்தியை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டுமெனில் அவன் வெறுமனே ஆரோக்கியமானவனாக இருத்தல் மட்டும் போதாது. இந்தக்காரணிகளும் கட்டாயமாக கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

கொள்கை வகுப்பாளர்களும் வகுப்பாளர்களும் திட்டமிடலில் பங்களிப்போரும் இளைஞர் அபிவிருத்தி அறிக்கையின் ஒவ்வொரு குறிகாட்டிகளையும் ஆராய்வதும் அதில் இலங்கையின் நிலையை கருத்தில் கொண்டு கொள்கைத்திட்டங்களை வகுத்தலுமே இலங்கை  சமுதாயத்துக்கு ஆரோக்கியமானதாகும்.

2016 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய செயலகத்தின் பூகோள இளைஞர் அபிவிருத்தி அறிக்கையை கீழ்வரும் இணைப்பில் நீங்கள் படிக்கலாம்.

http://cmydiprod.uksouth.cloudapp.azure.com/sites/default/files/2016-10/2016%20Global%20Youth%20Development%20Index%20and%20Report.pdf

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS