உலக புள்ளிவிபரவியல் தினம்
by Kiyanna Staff
ஐப்பசி 20, 2016

மிகச்சரியானதும் நீண்டகால நோக்கிலானதுமான தீர்மானங்களை எடுப்பதற்கு தரவுகள் மிக முக்கியமானவை . நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதில் நாடுகளும் நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளது போல நம்பகமானதும் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறும் குறிகாட்டிகளும் முக்கியமானவையாக உள்ளன.

2016 உலக புள்ளிவிபரவியல் தினத்தை குறிக்கும் வகையில் இலங்கை ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியமும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் அமைச்சும் இணைந்து மும்மொழி ஊடகவியலாளர்களும் தரவுகள் குறித்த தெளிவுபடுத்தற் கருத்தரங்கை இன்று வோட்டர்ஸ் எட்ஜ், கொழும்பில் நிகழ்த்தியிருந்தன. தரவுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது, விவரிப்பது மற்றும் பிரயோகிப்பது தொடர்பில் ஊடகவியலார்களுக்கு விளக்கமளிப்பதே இதன் நோக்கமாகும்.

UNFPA இந்த கருத்தரங்கில் உலக குடித்தொகையின் நிலை என்ற உலகின் முதல் பதிப்பை வெளியிட்டது. இந்த வருட பதிப்பானது ஒரு பத்து வயதுப்பெண் பிள்ளை தன் உள்ளார்ந்த ஆற்றல்களை முழுமையாக வெளிக்கொண்டுவர பத்திரிகையில் இருந்து கொள்கைப்பத்திரம் வரை உதிரி செய்தலை அடிநாதமாக கொண்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் நிரோஷான் பெரேரா கருத்துத் தெரிவிக்கும் போது “காலத்துடன் நடைபெறும் மாற்றங்களை புரிந்துகொள்ள புள்ளிவிபரங்கள் மிக அவசியம். இதன் மூலம் பொருளாதார, கலாச்சார சமூக குறிகாட்டிகள் பற்றிய தகவல்களை அறியலாம். மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கவும் வினைத்திறன் மிக்க செயற்திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தவும் பங்காளர்கள் அனைவருமே தரவுகள் நம்பகமானதும் சரியானவையுமாய் இருப்பதை உறுதி செய்யவேண்டும்” என்றார் .

மக்கள் தொகையில் மிகச்சிறிய அளவிலான பங்கினர் தான் உரிய அரச நிறுவனங்களை புள்ளிவிபரங்களுக்காக அணுகுகிறார்கள். எஞ்சியோர் சரியான அறிவார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்காக ஊடகங்கள் புள்ளிவிபரங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவிகளாக செயல்படவேண்டும். அறிவார்ந்த தீர்மானம் எடுக்கும் மக்களே நிலைபேறான அபிவிருத்திக்கான மூலைக்கற்கள் ஆவர்!

 

Feature image coutesy: http://www.emtv.com.pg/news/2015/10/2015-world-statistics-day-better-data-better-lives/

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS