எது காதல் (அல்ல)? …….
by admin
பங்குனி 8, 2016

அழகாய் ஒருவர் இருப்பதனால் வருகிற ஆசை

”காதல் அல்ல”

இயல்பாய் சிரித்து பழகுவதால் ஈர்ப்பு வருவதும்
”காதல் அல்ல”

உதவிகள் செய்து ஊக்குவித்தால் வருகிற மதிப்பு
”காதல் அல்ல”

பரிதாபம் கொண்டு ஒருவரில் இரங்குதல் என்பதும்

”காதல் அல்ல”

 

உணர்வுகள் மதித்து புரிவது ‘காதல்’
இருமனம் ஒன்றித்து இணைவது ‘காதல்’

உணர்வினை சொல்லுதல் உரிமை போலே
மறுப்பினை சொல்வதும் ஓர் உரிமை

 

விரும்பா உறவை வற்புறுத்தி விரும்பச் செய்வதும்
”காதல் அல்ல”
மறுத்துவிட்ட பின் மனமுடைந்து உயிரை மாய்ப்பதும்
”காதல் அல்ல”

விலகிப்போகும் ஒருவரினை விரட்டிச் செல்லவதும்
”காதல் அல்ல”

ஏற்க மறுத்தவர் உயிரினை எடுத்திட துணிவதும்
”காதல் அல்ல”

 

கனவுகள் மெய்ப்பட துணை நிற்றல் ‘காதல்’

தடைகள் தகர்த்திட தைரியம்  ‘காதல்’

இணைந்தே இருவரும் பயணித்தல்  ‘காதல்’

உணர்ந்தே நடந்தால் உயர்த்திடும் ‘காதல்’

 
உரிமையின் பெயரில் உடல் உள வன்முறை
”காதல் அல்ல”
அன்பெனும் பெயரில் அதிகாரம் அதன் பெயர் கூட
”காதல் அல்ல”
சாதனைப்பாதையில் விலங்காகும் கட்டுப்பாடுகள் விதிப்பது
”காதல் அல்ல”
சிறு வேற்றுமை கண்டதும் தாழ்த்திப் பேசுதல்
”காதல் அல்ல”

உலகத்தில் மாந்தர் படைப்பினிலே

உடலியல் கூற்றினில் வேறெனினும்

உணர்வுகள் உரிமைகள் சமனாகும் – இந்த

உண்மையை உரைப்போம் அனைவருக்கும்……….

 

Mehala Makilraja

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS